நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
கணிதம் போன்ற பாடங்களுக்கு நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதிய ஆட்சேர்ப்பு முறை மூலம் அந்தந்த பாடங்களுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.
2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முறையான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை, இந்த ஆண்டிற்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.
இதற்கான நிதி மற்றும் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 பேர் தோற்றியிருந்தனர். தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இதேவேளை அதிபர் சேவை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய ஆட்சேர்ப்பு முறை: அரசாங்கம் நடவடிக்கை நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாட ரீதியான ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.கணிதம் போன்ற பாடங்களுக்கு நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், புதிய ஆட்சேர்ப்பு முறை மூலம் அந்தந்த பாடங்களுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.2021-ஆம் ஆண்டிற்குப் பின்னர் முறையான ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை, இந்த ஆண்டிற்குள் 30,000 புதிய ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவர் என உறுதி அளித்தார்.இதற்கான நிதி மற்றும் அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் பட்டதாரிகள் உட்பட சுமார் 180,000 பேர் தோற்றியிருந்தனர். தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.இதேவேளை அதிபர் சேவை சார்ந்த சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.