அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை கட்டிடம், புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிகும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் இலங்கை வங்கி கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருவாளர் ஏ.சி.மகவந்த தலைமையில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.
நாவிதன்வெளி அன்னமலை பிரதான வீதியில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பிரதேசத்தின் ஒரே ஒரு வங்கி சேவையாக இயங்கி வரும் இலங்கை வங்கி கிளையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன், உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், பிரதேச சபை தவிசாளர் கௌரவ இந்திரன் ரூபசாந்தன், இலங்கை வங்கி பிரதிப் பொது முகாமையாளர் எச். பிரியாள் சில்வா, நாவிதன்வெளி வங்கி முகாமையாளர் சீ.டேவிட் உட்பட இலங்கை வங்கி கிளைகளின் முகாமையாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், அதிபர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாவிதன்வெளி அன்னமலை பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியத்தோடு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் நாடவை வெட்டி திறந்து வைத்தனர்.
கலந்து கொண்ட அதிதிகள் இங்கு உரையாற்றியதோடு வாடிக்கையாளர் சார்பிலும் ஒருவர் உரை நிகழ்தினார் இவர் தனது உரையில், நாவிதன்வெளி பிரதேசத்தில் இலங்கை வங்கி கிளை அலுவலகத்தின் செயற்பாடுகள் பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வரமாகும். இலங்கை வங்கி கிளை இப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்டு இற்றைக்கு 15 வருடங்கள் தாண்டியும் வேறு எந்த ஒரு வங்கிக்கிளையும் இங்கு ஆரம்பிக்கப்படவில்லை. இதனை மக்கள் விளங்க வேண்டும்.
இங்கு வாழும் மக்கள் வங்கி சேவை பெறுவதற்கு காலையில் பஸ் ஏறி கல்முனை நகருக்குச் சென்று மீண்டும் மாலை வேளையிலேயே அங்கிருந்து வீடு வந்து சேர வேண்டும். குறித்த நேரத்துக்கு மாத்திரமே எமக்கு பஸ் சேவை உண்டு. இந்நிலையில், இந்த வங்கி கிளையின் சேவைகள் தொடர்ந்தும் சிறப்பான சேவையாக பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின் இறுதியில் வாடிக்கையாளர்களுடனான கொடுக்கல் வாங்கல் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி இலங்கை வங்கி கிளை அலுவலகம் திறந்து வைப்பு அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கி கிளை கட்டிடம், புதிய இடத்திற்கு இடமாற்றப்பட்டு பொதுமக்களுக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிகும் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வுகள் இலங்கை வங்கி கிழக்கு மாகாண பொது முகாமையாளர் திருவாளர் ஏ.சி.மகவந்த தலைமையில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.நாவிதன்வெளி அன்னமலை பிரதான வீதியில் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பிரதேசத்தின் ஒரே ஒரு வங்கி சேவையாக இயங்கி வரும் இலங்கை வங்கி கிளையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்திரன், உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், பிரதேச சபை தவிசாளர் கௌரவ இந்திரன் ரூபசாந்தன், இலங்கை வங்கி பிரதிப் பொது முகாமையாளர் எச். பிரியாள் சில்வா, நாவிதன்வெளி வங்கி முகாமையாளர் சீ.டேவிட் உட்பட இலங்கை வங்கி கிளைகளின் முகாமையாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், அதிபர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.நாவிதன்வெளி அன்னமலை பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியத்தோடு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் நாடவை வெட்டி திறந்து வைத்தனர்.கலந்து கொண்ட அதிதிகள் இங்கு உரையாற்றியதோடு வாடிக்கையாளர் சார்பிலும் ஒருவர் உரை நிகழ்தினார் இவர் தனது உரையில், நாவிதன்வெளி பிரதேசத்தில் இலங்கை வங்கி கிளை அலுவலகத்தின் செயற்பாடுகள் பொதுமக்களுக்கு கிடைத்த ஒரு பெரும் வரமாகும். இலங்கை வங்கி கிளை இப்பகுதியில் ஆரம்பிக்கப் பட்டு இற்றைக்கு 15 வருடங்கள் தாண்டியும் வேறு எந்த ஒரு வங்கிக்கிளையும் இங்கு ஆரம்பிக்கப்படவில்லை. இதனை மக்கள் விளங்க வேண்டும்.இங்கு வாழும் மக்கள் வங்கி சேவை பெறுவதற்கு காலையில் பஸ் ஏறி கல்முனை நகருக்குச் சென்று மீண்டும் மாலை வேளையிலேயே அங்கிருந்து வீடு வந்து சேர வேண்டும். குறித்த நேரத்துக்கு மாத்திரமே எமக்கு பஸ் சேவை உண்டு. இந்நிலையில், இந்த வங்கி கிளையின் சேவைகள் தொடர்ந்தும் சிறப்பான சேவையாக பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.நிகழ்வின் இறுதியில் வாடிக்கையாளர்களுடனான கொடுக்கல் வாங்கல் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.