• Oct 01 2026

தேசிய மாணவர் தூதுவர் மாநாடு முதன்முறையாக கொழும்பில்

dorin / Sep 30th 2026, 3:02 pm
image

மாணவர் தூதுவர் குழுக்களுக்கான தேசிய மட்ட மாணவர் தூதுவர் மகாநாடு முதல் தடவையாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்து மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்ற பாடசாலைகளின் மாணவர் தூதுவர் குழுவினர் பொறுப்பாசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டனர் . தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , கல்வி அமைச்சு , பல்கலைக்கழக மானியங்கள் ஆனை குழு ஆகிய ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது .

தேசிய ரீதியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர் தூதுவர் குழுக்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி தெரிவிக்க பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளுக்கும் பதக்கங்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

இந்த வகையில் 2024 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தின் முதலாம் இடத்தை தலவாக்கலை பாரதி மகா வித்யாலயா மாணவர் தூதுவர் குழு பெற்றுக் கொண்டது .

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 15 செயற்பாடுகளை பாடசாலை மட்டத்தில் சிறப்பாக முன்னெடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களை தெளிவூட்டல் செய்தனை தொடர்பிலேயே முதலாம் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பு பாரதி மகா வித்யாலயா அன்னைக்கு கிடைத்தது . குறித்தும் பாடசாலையில் மாணவர் தூதுவர் குழுவில் எடிசன்  கவிசாந்த்  பவிஷான்  சங்கீதா  லிஷாந்திகா  நதீஷன் ஆகியோர் தங்கத்தவர்களாக இருந்து செய்யப்பட்டனர் .  

இதன் பிரகாரம் இன்றைய தினம் நடைபெற்ற தேசிய மகாநாட்டில் பாரதி மகா வித்யாலயா மாணவர் தொகுத்தவர் குழுவின் அங்கத்தவர்   கவிஷாந்த் மற்றும் உதவி சிரேஷ்ட்ட  மாணவர் தலைவி  புனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாடசாலையின் அதிபர் திரு பெரியநாயகம், ஒழுங்காற்றுக் குழு செயலாளர் மாணவர் தூதுவர் குழுவின் பொறுப்பாசிரியருமான திரு சுஜித் சுரேன், நுவரெலியா  மாவட்ட சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பதிகாரி திரு ஹரேன்திரன் , மாவட்ட செயலகத்தின் சார்பில் உளவியல் பிரிவிற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றும் திருமதி நிரோஷா ஆகியோரம் கலந்து கொண்டனர்.  

பாரதி மகா வித்தியாலய மாணவர் தூதுவர் குழுவின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு  பாடசாலையின் நிர்வாகம் மற்றும் குழுவில் தூதுவர்களை வழிப்படுத்தி செயற்படுத்திய ஆசிரியர்களான திருமதி கமலேஸ்வரி திருமதி கோகிலவாணி ஆகியோரும் இந்த வெற்றியின் பங்காளிகள் . ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் மாணவர் தலைவர்களில் இருந்து மாணவர் தூதுவர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மாணவர் தூதுவர் குழு பாடசாலைகளில்  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தேசிய மாணவர் தூதுவர் மாநாடு முதன்முறையாக கொழும்பில் மாணவர் தூதுவர் குழுக்களுக்கான தேசிய மட்ட மாணவர் தூதுவர் மகாநாடு முதல் தடவையாக இன்றைய தினம் கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களில் இருந்து மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்ற பாடசாலைகளின் மாணவர் தூதுவர் குழுவினர் பொறுப்பாசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டனர் . தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , கல்வி அமைச்சு , பல்கலைக்கழக மானியங்கள் ஆனை குழு ஆகிய ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது .தேசிய ரீதியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர் தூதுவர் குழுக்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி தெரிவிக்க பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளுக்கும் பதக்கங்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த வகையில் 2024 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தின் முதலாம் இடத்தை தலவாக்கலை பாரதி மகா வித்யாலயா மாணவர் தூதுவர் குழு பெற்றுக் கொண்டது . சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட 15 செயற்பாடுகளை பாடசாலை மட்டத்தில் சிறப்பாக முன்னெடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களை தெளிவூட்டல் செய்தனை தொடர்பிலேயே முதலாம் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பு பாரதி மகா வித்யாலயா அன்னைக்கு கிடைத்தது . குறித்தும் பாடசாலையில் மாணவர் தூதுவர் குழுவில் எடிசன்  கவிசாந்த்  பவிஷான்  சங்கீதா  லிஷாந்திகா  நதீஷன் ஆகியோர் தங்கத்தவர்களாக இருந்து செய்யப்பட்டனர் .  இதன் பிரகாரம் இன்றைய தினம் நடைபெற்ற தேசிய மகாநாட்டில் பாரதி மகா வித்யாலயா மாணவர் தொகுத்தவர் குழுவின் அங்கத்தவர்   கவிஷாந்த் மற்றும் உதவி சிரேஷ்ட்ட  மாணவர் தலைவி  புனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாடசாலையின் அதிபர் திரு பெரியநாயகம், ஒழுங்காற்றுக் குழு செயலாளர் மாணவர் தூதுவர் குழுவின் பொறுப்பாசிரியருமான திரு சுஜித் சுரேன், நுவரெலியா  மாவட்ட சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பதிகாரி திரு ஹரேன்திரன் , மாவட்ட செயலகத்தின் சார்பில் உளவியல் பிரிவிற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றும் திருமதி நிரோஷா ஆகியோரம் கலந்து கொண்டனர்.  பாரதி மகா வித்தியாலய மாணவர் தூதுவர் குழுவின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு  பாடசாலையின் நிர்வாகம் மற்றும் குழுவில் தூதுவர்களை வழிப்படுத்தி செயற்படுத்திய ஆசிரியர்களான திருமதி கமலேஸ்வரி திருமதி கோகிலவாணி ஆகியோரும் இந்த வெற்றியின் பங்காளிகள் . ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் மாணவர் தலைவர்களில் இருந்து மாணவர் தூதுவர்கள் தெரிவு செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை மாணவர் தூதுவர் குழு பாடசாலைகளில்  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement