கடந்த இரு தேர்தல்களைப் போல் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கத்தை பொறுத்தவரை கிராமப் புறங்களை அடிப்படையாக கொண்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே கிராமப் புற வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகிறது
எமது ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வட மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவது யாவரும் அறிந்த விடயம். 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் வடக்கு மாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
30 வருட யுத்தத்தினால் உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை கடந்த கால அரசாங்கங்கள் புறக்கணித்த நிலையில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வட மாகாணத்திற்கு அதிக நிதியை ஒதுக்கி உட்கட்டமைப்பை விருத்தி செய்கிறது. இதைவிட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2026 இறுதியில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றிய அதே கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய போவதாக கூறியுள்ளன. இதனை நினைக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. இவர்கள் இணைய நினைப்பது தேர்தலுக்காக மட்டுமே.
அவர்கள் தமிழ் மக்களுக்காக ஒற்றுமை படுவதாக இருந்தால் தேர்தல் இல்லாத காலத்திலும் ஒற்றுமைப்பட்டு தமிழ் மக்களது உரிமைகளைப் பெறப் போவதாக கூறலாம். எவ்வாறாயினும், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் மக்களது ஆதரவை கடந்த தேர்தல்களில் காட்டியுள்ளது. அதேபோல் வரவிருக்கும் மாகாண சபை தேர்தலிலும் மக்களுடைய ஆதரவைப் பெறும். நாம் இதயசுத்தியுடன் வடக்கு மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம்.
2009இற்கு முன்னர் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை இவ்வாறு இருக்கவில்லை. ஆனால் அதற்கு பிற்பாடு திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. கடந்தகால அரசாங்கங்கள் இதனை செய்துள்ளன. எமது அரசாங்கம் வடக்கில் அதனை கட்டுப்படுத்தி இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் சட்டவிரோத நிதியீட்டங்கள், மறைக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.
வடமாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் - ஜெகதீஸ்வரன் எம்.பி கடந்த இரு தேர்தல்களைப் போல் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது அரசாங்கத்தை பொறுத்தவரை கிராமப் புறங்களை அடிப்படையாக கொண்டு அதன் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே கிராமப் புற வீதிகளை புனரமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகிறதுஎமது ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வட மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவது யாவரும் அறிந்த விடயம். 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் வடக்கு மாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.30 வருட யுத்தத்தினால் உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை கடந்த கால அரசாங்கங்கள் புறக்கணித்த நிலையில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வட மாகாணத்திற்கு அதிக நிதியை ஒதுக்கி உட்கட்டமைப்பை விருத்தி செய்கிறது. இதைவிட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2026 இறுதியில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றிய அதே கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய போவதாக கூறியுள்ளன. இதனை நினைக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. இவர்கள் இணைய நினைப்பது தேர்தலுக்காக மட்டுமே. அவர்கள் தமிழ் மக்களுக்காக ஒற்றுமை படுவதாக இருந்தால் தேர்தல் இல்லாத காலத்திலும் ஒற்றுமைப்பட்டு தமிழ் மக்களது உரிமைகளைப் பெறப் போவதாக கூறலாம். எவ்வாறாயினும், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கில் மக்களது ஆதரவை கடந்த தேர்தல்களில் காட்டியுள்ளது. அதேபோல் வரவிருக்கும் மாகாண சபை தேர்தலிலும் மக்களுடைய ஆதரவைப் பெறும். நாம் இதயசுத்தியுடன் வடக்கு மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். 2009இற்கு முன்னர் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை இவ்வாறு இருக்கவில்லை. ஆனால் அதற்கு பிற்பாடு திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. கடந்தகால அரசாங்கங்கள் இதனை செய்துள்ளன. எமது அரசாங்கம் வடக்கில் அதனை கட்டுப்படுத்தி இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் சட்டவிரோத நிதியீட்டங்கள், மறைக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.