• Sep 09 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது: பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய குற்றச்சாட்டு

dorin / Sep 9th 2026, 3:29 pm
image

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு சுபிட்சம்" என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர, நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. 

இவ்வாறான கூட்டங்கள் மூலம் அரசாங்கம் மீண்டும் மக்களை ஏமாற்ற முற்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இவ்வாறு கூட்டங்களை நடத்தி வருகின்றது.

நாட்டின் விவசாயிகள் தங்கள் அறுவடையை சரியான விலைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன், நெல்லுக்கு 152 ரூபாய் சான்றிதழ் விலை வழங்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரி போராட்டம் நடத்தியது.

ஆனால் ஆட்சிக்கு வந்த பின், 120 ரூபாய் சான்றிதழ் விலையை நிர்ணயித்துள்ளதுடன், அந்த விலையிலாவது நெல்லைக் கொள்முதல் செய்ய எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. 

மேலும், அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகவும், அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அத்தியாவசிய உணவுகளுக்கான VAT வரியை நீக்குவதாக உறுதியளித்த போதிலும், அரசாங்கத்தால் வரியைக் குறைக்க முடியவில்லை.

மின்சாரக் கட்டணத்தை 30% - 35% வரை குறைப்பதாகவும், எரிபொருளுக்கான VAT வரியை நீக்கி குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழிந்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான VAT குறைக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி கனவு காட்டினார், ஆனால் இன்று ஒரு மிதிவண்டியைக்கூட வாங்க முடியாத நிலையையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது. 

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அதன் பலன் பணக்காரர்களுக்கே சென்று சேர்ந்தது. புதிய 50% குத்தகை  கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக, சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு சிறிய கார், த்ரீவீலர் அல்லது மோட்டார் சைக்கிளைக்கூட தவணை முறையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கவில்லை. பாதைகளை புனரமைக்க பொக்கிஷ பணத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர், ஏனெனில் அதற்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய டொலர்கள் தேவை. 'டித்வா' புயலால் சேதமடைந்த ரயில் பாதையைக் கூட அரசாங்கத்தால் இன்னும் சீரமைக்க முடியவில்லை. கடந்தகால ஆட்சிகளில் ஊழல் இருந்தபோதிலும் அபிவிருத்தி நடந்தது.

ஆனால் இந்த அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தியும் இல்லை, அதேவேளை ஊழல்களும் நடந்துள்ளன. அனுமதியின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் 19 தரமற்ற நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற பெருவாரியான ஊழல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி தனது நண்பர்களைக் காப்பாற்ற சட்டத்தைச் சரிவர நடைமுறைப்படுத்தவில்லை.

இலவச சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசாங்கம், தற்போது அதனை சீரழித்து வருகின்றது. மருத்துவமனைகளில் கடும் மருந்துப் தட்டுப்பாடு நிலவுவதுடன் சுகாதாரத் துறை முற்றாக முடங்கியுள்ளது.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எவ்வித அரச அதிகாரமும் நிதியுமின்றி, மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் மருந்துகளையும் வழங்கி உதவினார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் சட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. 

மேலும், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த அறிக்கைக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது: பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய குற்றச்சாட்டு எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்கு சுபிட்சம்" என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர, நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இவ்வாறான கூட்டங்கள் மூலம் அரசாங்கம் மீண்டும் மக்களை ஏமாற்ற முற்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இவ்வாறு கூட்டங்களை நடத்தி வருகின்றது.நாட்டின் விவசாயிகள் தங்கள் அறுவடையை சரியான விலைக்கு விற்க முடியாத நிலை காணப்படுகின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன், நெல்லுக்கு 152 ரூபாய் சான்றிதழ் விலை வழங்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரி போராட்டம் நடத்தியது.ஆனால் ஆட்சிக்கு வந்த பின், 120 ரூபாய் சான்றிதழ் விலையை நிர்ணயித்துள்ளதுடன், அந்த விலையிலாவது நெல்லைக் கொள்முதல் செய்ய எவ்வித திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. மேலும், அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகவும், அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அத்தியாவசிய உணவுகளுக்கான VAT வரியை நீக்குவதாக உறுதியளித்த போதிலும், அரசாங்கத்தால் வரியைக் குறைக்க முடியவில்லை.மின்சாரக் கட்டணத்தை 30% - 35% வரை குறைப்பதாகவும், எரிபொருளுக்கான VAT வரியை நீக்கி குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினர். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழிந்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான VAT குறைக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி கனவு காட்டினார், ஆனால் இன்று ஒரு மிதிவண்டியைக்கூட வாங்க முடியாத நிலையையே அரசாங்கம் உருவாக்கியுள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அதன் பலன் பணக்காரர்களுக்கே சென்று சேர்ந்தது. புதிய 50% குத்தகை  கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக, சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு சிறிய கார், த்ரீவீலர் அல்லது மோட்டார் சைக்கிளைக்கூட தவணை முறையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கவில்லை. பாதைகளை புனரமைக்க பொக்கிஷ பணத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி மீண்டும் மக்களை ஏமாற்றுகின்றனர், ஏனெனில் அதற்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய டொலர்கள் தேவை. 'டித்வா' புயலால் சேதமடைந்த ரயில் பாதையைக் கூட அரசாங்கத்தால் இன்னும் சீரமைக்க முடியவில்லை. கடந்தகால ஆட்சிகளில் ஊழல் இருந்தபோதிலும் அபிவிருத்தி நடந்தது.ஆனால் இந்த அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தியும் இல்லை, அதேவேளை ஊழல்களும் நடந்துள்ளன. அனுமதியின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் 19 தரமற்ற நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற பெருவாரியான ஊழல்கள் குறித்து அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஜனாதிபதி தனது நண்பர்களைக் காப்பாற்ற சட்டத்தைச் சரிவர நடைமுறைப்படுத்தவில்லை.இலவச சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசாங்கம், தற்போது அதனை சீரழித்து வருகின்றது. மருத்துவமனைகளில் கடும் மருந்துப் தட்டுப்பாடு நிலவுவதுடன் சுகாதாரத் துறை முற்றாக முடங்கியுள்ளது.ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எவ்வித அரச அதிகாரமும் நிதியுமின்றி, மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் மருந்துகளையும் வழங்கி உதவினார்.அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் சட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. மேலும், 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த அறிக்கைக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement