போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் "முழு நாடுமே ஒன்றாக" என்ற தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர். எம். ஜே. எஸ். ரத்தினமலல தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கிண்ணியா மத்திய பஸ் நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன.
இதேவேளை "முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய தம்பலகாமம் பொலிஸார் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று (18) தம்பலகாமம் கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியில் இடம் பெற்றது.
திருகோணமலை கண்டி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள், தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜாவின் தலைமையில் காந்தி பூங்காவில் இன்று இடம்பெற்றது.
இத்தேசிய செயற்றிட்டத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும் 'விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்" - அகன்று செல்" எனும் வாசகத்தை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டன.
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்: விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஆரம்பம் போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் "முழு நாடுமே ஒன்றாக" என்ற தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர். எம். ஜே. எஸ். ரத்தினமலல தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.கிண்ணியா மத்திய பஸ் நிலைய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டன.இதேவேளை "முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய தம்பலகாமம் பொலிஸார் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகம் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி இன்று (18) தம்பலகாமம் கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தியில் இடம் பெற்றது.திருகோணமலை கண்டி பிரதான வீதி ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை வாகனங்கள், தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் 'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜாவின் தலைமையில் காந்தி பூங்காவில் இன்று இடம்பெற்றது.இத்தேசிய செயற்றிட்டத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.மேலும் 'விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்" - அகன்று செல்" எனும் வாசகத்தை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டன.