சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார்.
இன்று (29) இரண்டு வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்
கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதில் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான கிரிஷ் வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு ஏற்கனவே ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் இடையீட்டு மனுவை பரிசீலித்த பின்னர், இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், எயார்பஸ் வானூர்தி கொள்முதல் ஊழல் தொடர்பான வழக்கிலும் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்காக அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு, கிரிஷ் ஒப்பந்த வழக்கையும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்; இன்று இரண்டு முக்கிய வழக்குகள் கவனத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார். இன்று (29) இரண்டு வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க் சதுக்கத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கியதில் கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான கிரிஷ் வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இந்த வழக்கு ஏற்கனவே ஒக்டோபர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் இடையீட்டு மனுவை பரிசீலித்த பின்னர், இன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், எயார்பஸ் வானூர்தி கொள்முதல் ஊழல் தொடர்பான வழக்கிலும் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்காக அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.இதனை கருத்திற்கொண்டு, கிரிஷ் ஒப்பந்த வழக்கையும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.