டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்காக, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் ஆரம்பிக்கப்பட்ட 'ஆதரய' திட்டத்திற்கு தனது மாத வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், பாடசாலை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 'ஆதரய' திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாட்டில் பிள்ளைகளுக்கு அன்பைக் கொண்டுவர விரும்பும் எவரும் இந்த திட்டத்திற்கு பங்களிக்கலாம் என்றும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
அத்தோடு, டிட்வா புயலின் விளைவுகளால் நாடு முழுவதும் 275,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு தனது வேதனத்தை வழங்கிய நாமல் டிட்வா புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்காக, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவினால் ஆரம்பிக்கப்பட்ட 'ஆதரய' திட்டத்திற்கு தனது மாத வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான புத்தகங்கள், பாடசாலை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக 'ஆதரய' திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையில், நாட்டில் பிள்ளைகளுக்கு அன்பைக் கொண்டுவர விரும்பும் எவரும் இந்த திட்டத்திற்கு பங்களிக்கலாம் என்றும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். அத்தோடு, டிட்வா புயலின் விளைவுகளால் நாடு முழுவதும் 275,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.