வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, அதனை சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர்,
யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு செப்டெம்பர் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதேவேளை, இந்த விசேட விடுமுறையால் கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில், பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
நல்லூர் தேர்த்திருவிழா; பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையா வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, அதனை சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு செப்டெம்பர் 9ஆம் திகதி விசேட விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.அதேவேளை, இந்த விசேட விடுமுறையால் கற்றல் நடவடிக்கைகளில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில், பதில் பாடசாலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.