• May 18 2026

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் - யாழ்.மாநகர சபையிடம் காளாஞ்சி கையளிப்பு

Chithra / May 17th 2026, 11:46 am
image

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாட்டு அழைப்பாக மாநகர சபையிடம் காளாஞ்சு கையளிக்கப்பட்டது.


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவ ஏற்பாடுகளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


நல்லூர் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள் மற்றும் ஆயத்தப் பணிகளுக்கான உத்தியோகபூர்வ அழைப்பாக ஆலய நிர்வாகம் சார்பில் இந்த காளாஞ்சி வழங்கப்பட்டது.


யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆலய நிர்வாகம் சார்பில் மாநகர முதல்வர் வி. மதிவதனி மற்றும் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் ஆகியோரிடம் காளாஞ்சி கையளிக்கப்பட்டது.


இதனையடுத்து, நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு தேவையான வெளி சூழல் மற்றும் பொது வசதி தொடர்பான ஆயத்தப் பணிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நல்லூர் வருடாந்த மகோற்சவம் வடக்கு மக்களின் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாகவும் விளங்குகிறது.


நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் - யாழ்.மாநகர சபையிடம் காளாஞ்சி கையளிப்பு நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாட்டு அழைப்பாக மாநகர சபையிடம் காளாஞ்சு கையளிக்கப்பட்டது.வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவ ஏற்பாடுகளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.நல்லூர் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான முன் ஏற்பாடுகள் மற்றும் ஆயத்தப் பணிகளுக்கான உத்தியோகபூர்வ அழைப்பாக ஆலய நிர்வாகம் சார்பில் இந்த காளாஞ்சி வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆலய நிர்வாகம் சார்பில் மாநகர முதல்வர் வி. மதிவதனி மற்றும் மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் ஆகியோரிடம் காளாஞ்சி கையளிக்கப்பட்டது.இதனையடுத்து, நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு தேவையான வெளி சூழல் மற்றும் பொது வசதி தொடர்பான ஆயத்தப் பணிகளை யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நல்லூர் வருடாந்த மகோற்சவம் வடக்கு மக்களின் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாகவும் விளங்குகிறது.

Advertisement

Advertisement

Advertisement