• May 15 2026

குமுழமுனையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

shanu / May 15th 2026, 7:33 pm
image

முல்லைத்தீவு - குமுழமுனையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூலக்கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 15.05.2026இன்று முன்னெடுக்கப்பட்டது.


அந்தவகையில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்லையா சிறீஸ்கந்தராசா தலைமையில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது.


இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குமுழமுனையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் முல்லைத்தீவு - குமுழமுனையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மூலக்கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு 15.05.2026இன்று முன்னெடுக்கப்பட்டது.அந்தவகையில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்லையா சிறீஸ்கந்தராசா தலைமையில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டது.இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement