• Aug 23 2026

களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; 17 வயது சிறுவன் உயிரிழப்பு

Chithra / Aug 23rd 2026, 12:08 pm
image


மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.


களுவாஞ்சிகுடி நோக்கி அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நின்றிருந்த சிறுவர்கள் மீதும் வீதியைக் கடக்க முயன்றவர்கள் மீதும் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்தில் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற போது, இரவு சுமார் 9.30 மணியளவில் குறித்த பகுதியில் வீதியைக் கடப்பதற்காக சிறுவர்கள் உள்ளிட்ட சிலர் நின்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர், அதில் பயணித்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்றிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்


களுவாஞ்சிகுடியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; 17 வயது சிறுவன் உயிரிழப்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியில் கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (22) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.களுவாஞ்சிகுடி நோக்கி அதிவேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நின்றிருந்த சிறுவர்கள் மீதும் வீதியைக் கடக்க முயன்றவர்கள் மீதும் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் கிஷோர் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவம் இடம்பெற்ற போது, இரவு சுமார் 9.30 மணியளவில் குறித்த பகுதியில் வீதியைக் கடப்பதற்காக சிறுவர்கள் உள்ளிட்ட சிலர் நின்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர், அதில் பயணித்தவர் மற்றும் வீதியோரத்தில் நின்றிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement