காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்தத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மகளான முன்பள்ளி சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் விபத்துக்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கார் சாரதியின் அசமந்த போக்கினால் விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காருடன் மோதிய மோட்டார்சைக்கிள் - தாய், மகள் படுகாயம் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பில் இருந்து சென்ற காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்தத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மகளான முன்பள்ளி சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் விபத்துக்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மகளான சிறுமியை முன்பள்ளிக்கு கூட்டிச் சென்றபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் சாரதியின் அசமந்த போக்கினால் விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.