• Jun 04 2026

குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு சத்தமிட்ட தாய்; எல்பிட்டியவில் நடந்த பயங்கரம்

Chithra / Jun 3rd 2026, 12:16 pm
image

தனது இரண்டரை மாதமேயான பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர்,  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எல்பிட்டிய - கஹதுவ, துடுவேகொட பகுதியில் இக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. 

 

சந்தேக நபரான தாய், குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர், "நான் மகளை கிணற்றில் போட்டுவிட்டேன்" என்று கூறி சத்தமிட்டுள்ளார்.


அந்த சத்தத்தைக் கேட்டு உடனடியாக செயற்பட்ட அவரது கணவர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தனது மகளை மீட்டுள்ளார்.


பின்னர், அயலவர்களின் உதவியுடன் குழந்தை உடனடியாக வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளார்.  இதன் காரணமாகவே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமற்ற ஒன்றாக இருந்தமையும், குறித்த குழந்தையின் உயிரை காப்பாற்ற பிரதான காரணியாக அமைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் ஆரோக்கிய நிலைமை கவலைக்கிடமாக இல்லை என எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு சத்தமிட்ட தாய்; எல்பிட்டியவில் நடந்த பயங்கரம் தனது இரண்டரை மாதமேயான பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர்,  நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எல்பிட்டிய - கஹதுவ, துடுவேகொட பகுதியில் இக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.  சந்தேக நபரான தாய், குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர், "நான் மகளை கிணற்றில் போட்டுவிட்டேன்" என்று கூறி சத்தமிட்டுள்ளார்.அந்த சத்தத்தைக் கேட்டு உடனடியாக செயற்பட்ட அவரது கணவர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தனது மகளை மீட்டுள்ளார்.பின்னர், அயலவர்களின் உதவியுடன் குழந்தை உடனடியாக வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளார்.  இதன் காரணமாகவே குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குழந்தை வீசப்பட்ட கிணறு ஆழமற்ற ஒன்றாக இருந்தமையும், குறித்த குழந்தையின் உயிரை காப்பாற்ற பிரதான காரணியாக அமைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் ஆரோக்கிய நிலைமை கவலைக்கிடமாக இல்லை என எல்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement