• Jun 02 2026

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த செலவு அதிகரிப்பு!

Chithra / Jun 2nd 2026, 11:48 am
image

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, 


மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக் கோட்டின் பெறுமதி 427 ரூபாவினால் அதிகரித்துள்ளது.


மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின் பெறுமதி 16,690 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.


இந்த அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவை மதிப்பிடுகிறது.


ஏப்ரல் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, அதன் அதிகபட்ச பெறுமதி கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அது 18,461 ரூபாவாகும்.


வறுமைக் கோட்டின் குறைந்தபட்ச பெறுமதி மொனராகலை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அது 16,367 ரூபாவாகும்.


https://www.statistics.gov.lk/povertyLine/2021_Rebase

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த செலவு அதிகரிப்பு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக் கோட்டின் பெறுமதி 427 ரூபாவினால் அதிகரித்துள்ளது.மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின் பெறுமதி 16,690 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.இந்த அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவை மதிப்பிடுகிறது.ஏப்ரல் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, அதன் அதிகபட்ச பெறுமதி கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அது 18,461 ரூபாவாகும்.வறுமைக் கோட்டின் குறைந்தபட்ச பெறுமதி மொனராகலை மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அது 16,367 ரூபாவாகும்.https://www.statistics.gov.lk/povertyLine/2021_Rebase

Advertisement

Advertisement

Advertisement