• May 12 2026

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குரங்கு தொல்லை!

shanu / May 11th 2026, 9:40 am
image

கடந்த சில மாதங்களாக மறே தோட்ட பகுதியில் நல்லதண்ணி நகரில் சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் ரக்காடு கிராம பகுதிகளில் புரவுன்லோ தோட்ட பகுதியில் மஸ்கெலியா நகரில் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல தோட்டங்களில் குரங்கு தொல்லை அதிகரித்து வருகிறது.


குறிப்பாக விவசாய பொருட்கள் பலா, மாம்பழம்,கொய்யா,வாழை குலை,பட்டர் புரூட், ஏனைய காய் கறிகள், வீட்டில் சமைத்த உணவுகள், கடைகளில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ள திண் பண்டங்கள்,வழை பழங்கள் ஏனைய பழவகைகள் மற்றும் நீர் தாங்கிகளில் உள்ள நீரில் மூழ்கி நீராடல் வீட்டுக்குள் கழிவுகள் செய்தல் போன்ற பல சீரழிவு இடம் பெற்று வருகின்றன.


இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் பலன் இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த குரங்குகளை பிடித்து வன பகுதியில் கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும்.


குறிப்பாக குரங்கு எச்சங்களால் நோய் பரவும் அபாயமும் உள்ளது என தெரியவருகிறது.

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் குரங்கு தொல்லை கடந்த சில மாதங்களாக மறே தோட்ட பகுதியில் நல்லதண்ணி நகரில் சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையில் லக்சபான தோட்ட பகுதியில் ரக்காடு கிராம பகுதிகளில் புரவுன்லோ தோட்ட பகுதியில் மஸ்கெலியா நகரில் மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல தோட்டங்களில் குரங்கு தொல்லை அதிகரித்து வருகிறது.குறிப்பாக விவசாய பொருட்கள் பலா, மாம்பழம்,கொய்யா,வாழை குலை,பட்டர் புரூட், ஏனைய காய் கறிகள், வீட்டில் சமைத்த உணவுகள், கடைகளில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ள திண் பண்டங்கள்,வழை பழங்கள் ஏனைய பழவகைகள் மற்றும் நீர் தாங்கிகளில் உள்ள நீரில் மூழ்கி நீராடல் வீட்டுக்குள் கழிவுகள் செய்தல் போன்ற பல சீரழிவு இடம் பெற்று வருகின்றன.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் பலன் இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த குரங்குகளை பிடித்து வன பகுதியில் கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும்.குறிப்பாக குரங்கு எச்சங்களால் நோய் பரவும் அபாயமும் உள்ளது என தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement