அம்பாந்தோட்டை - தங்காலை - சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று காலை மீட்கப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
தங்காலை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் முன்னதாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று மதியம் தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் அளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்துடன் அந்த லொறியில் இருந்து 4 நவீன துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருளுடன் சிக்கிய லொறியில் நவீன துப்பாக்கிகள் அம்பாந்தோட்டை - தங்காலை - சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று காலை மீட்கப்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். தங்காலை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் முன்னதாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இன்று மதியம் தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோகிராம் அளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.அத்துடன் அந்த லொறியில் இருந்து 4 நவீன துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.