• May 02 2026

சோகமாக மாறிய மே தின சுற்றுலா - பேருந்து கவிழ்ந்து விபத்து!

shanu / May 2nd 2026, 3:51 pm
image

மே தினத்தில் சுற்றுலாவிற்குச் சென்ற  பேருந்து ஒன்று சாலையிலிருந்து விலகி புதருக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.


இந்த விபத்துச் சம்பவம் மேற்கு மெக்சிகோவின்  மேற்கு மாநிலமான நயாரிட் பகுதியில் நேற்று இடம்பெற்றது.  


விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


ஜலிஸ்கோ மாநிலத்திலிருந்து பயணித்த அந்தப் பேருந்து, அமட்லான் டி கானாஸ் நகருக்கு அருகே நெடுஞ்சாலையிலிருந்து விலகி கவிழ்ந்ததாக நயாரிட் மாநில அரசு தெரிவித்தது.


பயணிகள் நயாரிட்டில் உள்ள ஒரு சுற்றுலா மையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தையடுத்து நயாரிட் மற்றும் ஜலிஸ்கோவிலிருந்து குறித்த பகுதிக்கு விரைந்த அவசர மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு விபத்து தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 


விபத்து தொடர்பில் நயாரிட் அரசாங்கத்தால் பகிரப்பட்ட புகைப்படங்களில், பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து சேறு படிந்த நிலையில் காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சோகமாக மாறிய மே தின சுற்றுலா - பேருந்து கவிழ்ந்து விபத்து மே தினத்தில் சுற்றுலாவிற்குச் சென்ற  பேருந்து ஒன்று சாலையிலிருந்து விலகி புதருக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் மேற்கு மெக்சிகோவின்  மேற்கு மாநிலமான நயாரிட் பகுதியில் நேற்று இடம்பெற்றது.  விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜலிஸ்கோ மாநிலத்திலிருந்து பயணித்த அந்தப் பேருந்து, அமட்லான் டி கானாஸ் நகருக்கு அருகே நெடுஞ்சாலையிலிருந்து விலகி கவிழ்ந்ததாக நயாரிட் மாநில அரசு தெரிவித்தது.பயணிகள் நயாரிட்டில் உள்ள ஒரு சுற்றுலா மையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தையடுத்து நயாரிட் மற்றும் ஜலிஸ்கோவிலிருந்து குறித்த பகுதிக்கு விரைந்த அவசர மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு விபத்து தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். விபத்து தொடர்பில் நயாரிட் அரசாங்கத்தால் பகிரப்பட்ட புகைப்படங்களில், பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து சேறு படிந்த நிலையில் காணப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement