மாவனெல்லை தனாகமவத்த பகுதியில் நடந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பாக பதில் நீதவான் நிசேதா குமாரி கருணாதிலக்க நேற்று (2) ஸ்தலப் பரிசோதனை மேற்கொண்டார்.
கொல்லப்பட்டவர்களில் மாவனெல்லை, தனாகமவத்தையைச் சேர்ந்த 58 வயதான பெண் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஆகியோர் தமது வீடுகளில் தனியாக இருந்த வேளை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை, தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் சடலங்களைப் பார்வையிட்ட நீதவான், மேலதிக பிரேதப் பரிசோதனைக்காக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மாவனெல்லை சம்பவம்: ஸ்தலப் பரிசோதனை மேற்கொண்ட நீதவான் மாவனெல்லை தனாகமவத்த பகுதியில் நடந்த முக்கொலைச் சம்பவம் தொடர்பாக பதில் நீதவான் நிசேதா குமாரி கருணாதிலக்க நேற்று (2) ஸ்தலப் பரிசோதனை மேற்கொண்டார்.கொல்லப்பட்டவர்களில் மாவனெல்லை, தனாகமவத்தையைச் சேர்ந்த 58 வயதான பெண் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஆகியோர் தமது வீடுகளில் தனியாக இருந்த வேளை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அதே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை, தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது. மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் சடலங்களைப் பார்வையிட்ட நீதவான், மேலதிக பிரேதப் பரிசோதனைக்காக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.