கன மழை பெய்யும் போது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை கவரவலை சந்தியில் உள்ள கிராமம் மற்றும் கிரீன்லைட் பாம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டு வருகின்றது.
இதனை தவிர்க்க நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசஅதிபர் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக சாமிமலை ஓயா ஸ்ரஸ்பி ஓயா இரண்டும் சங்கமிக்கும் இடமான ஓல்ட் டன் சந்தி பகுதியில் உள்ள இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்பட்டு அப்பகுதியை அகலமாகவும் ஆழமாகவும் செய்யும் பட்சத்தில் வெள்ள பெருக்கில் இருந்து காப்பாற்றப்படலாம்
அத்துடன் அப் பகுதியில் எடுக்கப்படும் மணல், வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபைக்கு பயன்படுத்த முடியும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி கவரவலை கிராமம் ஊடறுத்து செல்லும் வாய்க்கால்களை அகலப்படுத்துவடன் ஆழப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதியில் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அடிக்கடி வெள்ளபெருக்கு ஏற்படும் மஸ்கெலியா -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை கன மழை பெய்யும் போது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை கவரவலை சந்தியில் உள்ள கிராமம் மற்றும் கிரீன்லைட் பாம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டு வருகின்றது.இதனை தவிர்க்க நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசஅதிபர் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.குறிப்பாக சாமிமலை ஓயா ஸ்ரஸ்பி ஓயா இரண்டும் சங்கமிக்கும் இடமான ஓல்ட் டன் சந்தி பகுதியில் உள்ள இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் அகற்றப்பட்டு அப்பகுதியை அகலமாகவும் ஆழமாகவும் செய்யும் பட்சத்தில் வெள்ள பெருக்கில் இருந்து காப்பாற்றப்படலாம்அத்துடன் அப் பகுதியில் எடுக்கப்படும் மணல், வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபைக்கு பயன்படுத்த முடியும்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி கவரவலை கிராமம் ஊடறுத்து செல்லும் வாய்க்கால்களை அகலப்படுத்துவடன் ஆழப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதியில் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.