மஸ்கெலியா – கார்மோட் பிரதான வீதி பல வருடங்களாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மோசமான காட்சியளிப்பதாக பிரதேச மக்கள் மற்றும் வாகன சாரதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வீதி முற்றுமுழுதாக சேதமடைந்து கற்களாக காணப்படுவதுடன், மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பயணிப்பது மிகவும் சிரமமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீதியை பயன்படுத்தும் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி பழுதடைவதால் சாரதிகள் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள், இந்த வீதியில் பயணிப்பதால் மாதந்தோறும் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதாகவும், இதனால் போக்குவரத்து சேவையில் நட்டநிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதிகளும் இதேபோன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், தினமும் வாகனங்களை காராஜில் திருத்துவதற்கே பணம் செலவாகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மஸ்கெலியா – கார்மோட் பிரதான வீதியை உடனடியாக புனரமைத்து மக்களின் போக்குவரத்து சிரமங்களுக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா – கார்மோட் வீதியின் மோசமான நிலை - பயணிகள், சாரதிகள் அவதி மஸ்கெலியா – கார்மோட் பிரதான வீதி பல வருடங்களாக திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மோசமான காட்சியளிப்பதாக பிரதேச மக்கள் மற்றும் வாகன சாரதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.வீதி முற்றுமுழுதாக சேதமடைந்து கற்களாக காணப்படுவதுடன், மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பயணிப்பது மிகவும் சிரமமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வீதியை பயன்படுத்தும் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி பழுதடைவதால் சாரதிகள் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள், இந்த வீதியில் பயணிப்பதால் மாதந்தோறும் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படுவதாகவும், இதனால் போக்குவரத்து சேவையில் நட்டநிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.முச்சக்கரவண்டி சாரதிகளும் இதேபோன்ற சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், தினமும் வாகனங்களை காராஜில் திருத்துவதற்கே பணம் செலவாகிறது என வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, மஸ்கெலியா – கார்மோட் பிரதான வீதியை உடனடியாக புனரமைத்து மக்களின் போக்குவரத்து சிரமங்களுக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.