வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான தைக்வொண்டோ போட்டியில்ஆண்கள் பிரிவில் முதற்தடவையாக முதலிடம் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ போட்டி கிளிநொச்சி உள்ளக அரங்கில் கடந்த 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில் வடமாகாணத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதில் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் ஆண்கள் பிரிவில் 06 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்று வடமாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களாக R. இளமைந்தன், R. ஜெரின், K. தனுசியன், K. சங்கவி, சுடரிலினி மற்றும் மணியரசன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், பிரியந்தன் மற்றும் அந்தோணிசாமி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், M. தர்சினி, V. சிந்துஜன் மற்றும் நிவேதன் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இவ்வாறான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மாணவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
வட தைக்வொண்டோ போட்டியில் மாங்குளம் மகாவித்தியாலயம் வரலாற்று சாதனை வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான தைக்வொண்டோ போட்டியில்ஆண்கள் பிரிவில் முதற்தடவையாக முதலிடம் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ போட்டி கிளிநொச்சி உள்ளக அரங்கில் கடந்த 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெற்றது.இப்போட்டியில் வடமாகாணத்தின் பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் ஆண்கள் பிரிவில் 06 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்று வடமாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களாக R. இளமைந்தன், R. ஜெரின், K. தனுசியன், K. சங்கவி, சுடரிலினி மற்றும் மணியரசன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், பிரியந்தன் மற்றும் அந்தோணிசாமி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், M. தர்சினி, V. சிந்துஜன் மற்றும் நிவேதன் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.இவ்வாறான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மாணவர்களுக்கு பாடசாலை சமூகத்தினரும், பெற்றோர்களும், பழைய மாணவர்களும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.