• May 19 2026

பொலிசாருக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் விளக்கமறியலில்..

Aathira / Dec 26th 2025, 12:08 pm
image

கடந்த 24ஆம் திகதி சாமிமலை கவரவலை பகுதியில் உள்ள சந்தேக நபர் ஒருவர், மஸ்கெலியா போலீஸ் அதிகாரிக்கு 710 மி.கி. கஞ்சா விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் கௌரவ பிரதீப் பணித்துள்ளார். 

மேலும் இச் சுற்றி வளைப்பின் போது கவரவலை 200 பிரிவைச் சேர்ந்த ஒருவர் மஸ்கெலியா சாமி மலை வீதியை சேர்ந்த இருவர் அடங்கலாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும்  குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா ஒரு லட்சம் வீதம் சரீர பிணையில் விடுதலை செய்யபட்டு உள்ளனர். 

இவர்கள் மூவரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆகும் படி பணித்துள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 24 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி புலத்சிங்கள, சார்ஜன்ட் ருக்மன் கான்ஸ்டபிள் நவ்சாத் இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இவர்கள் நால்வரும் நேற்று 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தபட்டமை குறிப்பிடத்தக்கது.


 

பொலிசாருக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் விளக்கமறியலில். கடந்த 24ஆம் திகதி சாமிமலை கவரவலை பகுதியில் உள்ள சந்தேக நபர் ஒருவர், மஸ்கெலியா போலீஸ் அதிகாரிக்கு 710 மி.கி. கஞ்சா விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் கௌரவ பிரதீப் பணித்துள்ளார். மேலும் இச் சுற்றி வளைப்பின் போது கவரவலை 200 பிரிவைச் சேர்ந்த ஒருவர் மஸ்கெலியா சாமி மலை வீதியை சேர்ந்த இருவர் அடங்கலாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும்  குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா ஒரு லட்சம் வீதம் சரீர பிணையில் விடுதலை செய்யபட்டு உள்ளனர். இவர்கள் மூவரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7 ம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆகும் படி பணித்துள்ளார்.மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 24 ம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி புலத்சிங்கள, சார்ஜன்ட் ருக்மன் கான்ஸ்டபிள் நவ்சாத் இச் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.இவர்கள் நால்வரும் நேற்று 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தபட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement