குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த குழந்தைகள் காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவதினத்தன்று காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நபரொருவர் படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி ஏதோ கேட்டுள்ளார். அதன் பின்னர் அந்த சிறுவனை தனது
பெல்ட்டை எடுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் சிறுவன நான் எதுவும் செய்யவில்லை எனக் கூறியபடியே ஐயோ.. ஐயோ எனக் கத்தியுள்ளார்.
வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பித்து கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்கினார்.
ஈவிரக்கமற்ற கொடூர நபர், சிறுவனின் அலறல் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனைத் தாக்கியுள்ளார்.
இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சமடைந்து பதறினர்.
சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்தவர்கள் தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொலிஸார் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த மாநில மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்ட்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸ் மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கிய நபர்; குழந்தைகள் காப்பகத்தில் சம்பவம் - காணொளி வெளியாகி அதிர்ச்சி குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சிறுவனை பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இந்தக் கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தைகள் காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சம்பவதினத்தன்று காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபரொருவர் படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி ஏதோ கேட்டுள்ளார். அதன் பின்னர் அந்த சிறுவனை தனதுபெல்ட்டை எடுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் சிறுவன நான் எதுவும் செய்யவில்லை எனக் கூறியபடியே ஐயோ. ஐயோ எனக் கத்தியுள்ளார். வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பித்து கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்கினார். ஈவிரக்கமற்ற கொடூர நபர், சிறுவனின் அலறல் சத்தத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனைத் தாக்கியுள்ளார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சமடைந்து பதறினர். சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்தவர்கள் தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தனர். காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொலிஸார் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த மாநில மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்ட்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸ் மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.