• May 19 2026

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர் விளக்கமறியலில்!

Chithra / Dec 31st 2025, 9:28 pm
image

 

திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இன்று சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது ஐஸ் போதைப்பொருள் 12 கிராம் 08 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-யாட்அப் ரோட் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர் விளக்கமறியலில்  திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இன்று சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனையிட்டபோது ஐஸ் போதைப்பொருள் 12 கிராம் 08 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-யாட்அப் ரோட் பகுதியில் வசித்துவரும் 29 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement