• Apr 27 2026

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு...!samugammedia

Ziya / Jan 30th 2024, 10:04 am
image

மகாத்மா காந்தியின் 75ஆவது சிரார்த்த தினம் இன்று(30) வடக்கு,  கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும்  செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.samugammedia மகாத்மா காந்தியின் 75ஆவது சிரார்த்த தினம் இன்று(30) வடக்கு,  கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதன் போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன் அகவணக்கமும்  செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement