• Apr 22 2026

இரணைமடுவிலிருந்து குடிநீர்பெற அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

shanu / Dec 22nd 2025, 1:42 pm
image

இரணைமடுக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கான அடையாளம் காட்டப்பட்ட மூன்று இடங்களிலிருந்து நீரைப்பெறுவதற்கு  ஒப்புதல் கடிதத்தை  மாவட்ட அரச அதிபரிடம்  இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மகஜர் கையளித்திருந்தனர்.


கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் தேவையைப்பூர்த்தி செய்வதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரைப்பெற்று சுத்திகரீத்து மக்களுக்கு வழங்குகின்றது. 


கிளிநொச்சி குளத்தின் நீரின் தரம் மழை காலங்களில் குறைவாக காணப்படுகின்ற நிலையில் இரணைமடுக்குளத்திலிருந்து நீரைப்பெற்றுக்கொள்வதற்கு இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அமைப்புக்களுடனும் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்,பொறியியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து  மூன்று இடங்களை அடையாளங்காட்டியிருந்தனர்.


கிளிநொச்சி குளம் வான் பாய்கின்ற பகுதி, கோவிந்தன் கடை சந்தி, தற்போது திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் இயங்கி வருகின்ற பகுதி என்பவற்றை அடையாளங்காட்டி அதற்கான ஒப்புதலை மாவட்ட அரசாங்கதிபரிடம் மகஜராக கையளித்திருந்தனர்.

இரணைமடுவிலிருந்து குடிநீர்பெற அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு இரணைமடுக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கான அடையாளம் காட்டப்பட்ட மூன்று இடங்களிலிருந்து நீரைப்பெறுவதற்கு  ஒப்புதல் கடிதத்தை  மாவட்ட அரச அதிபரிடம்  இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மகஜர் கையளித்திருந்தனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் தேவையைப்பூர்த்தி செய்வதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரைப்பெற்று சுத்திகரீத்து மக்களுக்கு வழங்குகின்றது. கிளிநொச்சி குளத்தின் நீரின் தரம் மழை காலங்களில் குறைவாக காணப்படுகின்ற நிலையில் இரணைமடுக்குளத்திலிருந்து நீரைப்பெற்றுக்கொள்வதற்கு இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அமைப்புக்களுடனும் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்,பொறியியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து  மூன்று இடங்களை அடையாளங்காட்டியிருந்தனர்.கிளிநொச்சி குளம் வான் பாய்கின்ற பகுதி, கோவிந்தன் கடை சந்தி, தற்போது திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் இயங்கி வருகின்ற பகுதி என்பவற்றை அடையாளங்காட்டி அதற்கான ஒப்புதலை மாவட்ட அரசாங்கதிபரிடம் மகஜராக கையளித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement