நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு முறையாக கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் லாஃப்ஸ் எரிவாயு கிடைக்காததால், வெற்று சிலிண்டர்களுடன் நுகர்வோர் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், லாஃப்ஸ் சிலிண்டர் வைத்திருப்போர் லிட்ரோ போன்ற ஏனைய நிறுவனங்களின் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், “முறையாக விநியோகம் செய்ய முடியாத நிலையில் மாதந்தோறும் விலை உயர்த்துவதில் என்ன பயன்?” என பாதிக்கப்பட்ட நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வர்த்தக அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லாஃப்ஸ் நிறுவனத்தால் தொடர்ந்தும் விநியோகம் சீராக மேற்கொள்ள முடியாத பட்சத்தில், அரசாங்கம் தலையிட்டு லாஃப்ஸ் வெற்று சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு லிட்ரோ எரிவாயு பயன்பாட்டுக்கு மாற்று திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபுறம், லிட்ரோ நிறுவனம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.
ஒரு வருடமாக லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு; விலை மட்டும் உயர்வு – கொந்தளிக்கும் நுகர்வோர் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு முறையாக கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் லாஃப்ஸ் எரிவாயு கிடைக்காததால், வெற்று சிலிண்டர்களுடன் நுகர்வோர் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், லாஃப்ஸ் சிலிண்டர் வைத்திருப்போர் லிட்ரோ போன்ற ஏனைய நிறுவனங்களின் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், “முறையாக விநியோகம் செய்ய முடியாத நிலையில் மாதந்தோறும் விலை உயர்த்துவதில் என்ன பயன்” என பாதிக்கப்பட்ட நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வர்த்தக அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாஃப்ஸ் நிறுவனத்தால் தொடர்ந்தும் விநியோகம் சீராக மேற்கொள்ள முடியாத பட்சத்தில், அரசாங்கம் தலையிட்டு லாஃப்ஸ் வெற்று சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு லிட்ரோ எரிவாயு பயன்பாட்டுக்கு மாற்று திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.இதற்கிடையில், நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 6,245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் சிலிண்டர் 220 ரூபாவால் உயர்த்தப்பட்டு 2,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபுறம், லிட்ரோ நிறுவனம் இந்த மாதத்திற்கான எரிவாயு விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது.