• Aug 31 2026

வெளிச்சம் அமைப்பின் நிதியுதவியில் புதிய தோற்றம் பெற்ற லிப்பகலை கிராம சேவகர் அலுவலகம்

dorin / Aug 31st 2026, 11:14 am
image

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை லிப்பகலை தோட்டத்தில் இயங்கி வந்த கிராம சேவகர் அலுவலகம் நீண்ட காலமாக பல்வேறு அடிப்படை குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வந்த நிலையில், தற்போது வெளிச்சம் அமைப்பின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றம் பெற்றுள்ளது.

குறித்த அலுவலகத்தில் போதிய இடவசதி, குடிநீர் வசதி, தளபாட வசதி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதுடன், மழைக்காலங்களில் கூரையின் ஊடாக மழைநீர் கசிந்து அலுவலகப் பணிகளுக்கும், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வந்தது.

மக்களின் இக்கட்டான நிலைமையை உணர்ந்த லிப்பகலை கிராம சேவகர், பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் வெளிச்சம் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ரூபன் மற்றும் நிதர்ஷன் ஆகியோரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றார்.

இதனையடுத்து அவர்கள் வெளிச்சம் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் மற்றும் கிருபாகரன் ஆகியோரிடம் விடயத்தை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, வெளிச்சம் அமைப்பின் நிதியுதவியின் கீழ் கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பழுதடைந்த கூரைத் தகடுகள் மாற்றப்பட்டு, அலுவலகத்திற்கு வர்ணம் பூசப்பட்டதுடன், தேவையான பௌதிக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு, குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களின் பிரதிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் வகையில் போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கிராம சேவகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரச சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் செலவுகள் குறைவதுடன், மாணவர்களும் தங்களது கல்வித் தேவைகளுக்கான ஆவணப் பிரதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகம் மற்றும் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் இலங்கைக்கான உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் தோட்டத் தலைவர்கள், வைத்திய அதிகாரி, சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து, அரச சேவைகளை அவர்களின் வாழ்விடத்திலேயே இலகுவாக பெற்றுக்கொள்ள உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மனிதநேயப் பணியானது, லிப்பகலை தோட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இத்தகைய சமூகநலப் பணிகள் தொடர வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

வெளிச்சம் அமைப்பின் நிதியுதவியில் புதிய தோற்றம் பெற்ற லிப்பகலை கிராம சேவகர் அலுவலகம் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை லிப்பகலை தோட்டத்தில் இயங்கி வந்த கிராம சேவகர் அலுவலகம் நீண்ட காலமாக பல்வேறு அடிப்படை குறைபாடுகளுக்கு மத்தியில் இயங்கி வந்த நிலையில், தற்போது வெளிச்சம் அமைப்பின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றம் பெற்றுள்ளது.குறித்த அலுவலகத்தில் போதிய இடவசதி, குடிநீர் வசதி, தளபாட வசதி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதுடன், மழைக்காலங்களில் கூரையின் ஊடாக மழைநீர் கசிந்து அலுவலகப் பணிகளுக்கும், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கும் பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வந்தது.மக்களின் இக்கட்டான நிலைமையை உணர்ந்த லிப்பகலை கிராம சேவகர், பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் வெளிச்சம் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ரூபன் மற்றும் நிதர்ஷன் ஆகியோரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றார்.இதனையடுத்து அவர்கள் வெளிச்சம் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் மற்றும் கிருபாகரன் ஆகியோரிடம் விடயத்தை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து, வெளிச்சம் அமைப்பின் நிதியுதவியின் கீழ் கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டது.இதன் ஒரு பகுதியாக பழுதடைந்த கூரைத் தகடுகள் மாற்றப்பட்டு, அலுவலகத்திற்கு வர்ணம் பூசப்பட்டதுடன், தேவையான பௌதிக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு, குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது முக்கிய ஆவணங்களின் பிரதிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளும் வகையில் போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கிராம சேவகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் அரச சேவைகளைப் பெறுவதற்காக மக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் செலவுகள் குறைவதுடன், மாணவர்களும் தங்களது கல்வித் தேவைகளுக்கான ஆவணப் பிரதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.புனரமைக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகம் மற்றும் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.இந்நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் இலங்கைக்கான உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் தோட்டத் தலைவர்கள், வைத்திய அதிகாரி, சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து, அரச சேவைகளை அவர்களின் வாழ்விடத்திலேயே இலகுவாக பெற்றுக்கொள்ள உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மனிதநேயப் பணியானது, லிப்பகலை தோட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இத்தகைய சமூகநலப் பணிகள் தொடர வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement

Advertisement

Advertisement