• Nov 24 2026

பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Chithra / Nov 23rd 2026, 4:16 pm
image


இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (23) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


இந்த எச்சரிக்கை இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்க அபாய எச்சரிக்கை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (23) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும், அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement