• Apr 20 2026

கீரிமலை கடலில் மூழ்கி பலியான உயிர் - வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினருடன் சென்றவருக்கு சோகம்

Chithra / Apr 20th 2026, 8:14 am
image

யாழ்ப்பாணம் - கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி ஆணொருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார்.


இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 


உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கீரிமலை கடலில் மூழ்கி பலியான உயிர் - வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினருடன் சென்றவருக்கு சோகம் யாழ்ப்பாணம் - கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி ஆணொருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். ஏனையோர் கேணியில் குளித்தவேளை குறித்த நபர் கடலில் இறங்கி குளித்துள்ளார்.இதன்போது தீடீரெ நீரில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் அவரது சடலம் கரையொதுங்கியது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement