• May 17 2026

'சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலக' சதித்திட்டத்தை தோற்கடிப்போம்! சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் அழைப்பு

Chithra / Jan 22nd 2026, 10:53 am
image

புலம்பெயர் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் முன்னெடுக்கின்ற 'சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை' (Office of Independent Prosecutor) நிறுவும் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் எனவும், இராணுவ வீரர்களை வேட்டையாடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர் 'ஐஸ்வர்ய குணரத்ன அதிகாரி' விடுத்துள்ள அறிக்கையில், 


தற்போது சில யூடியூப் குழுக்கள் உள்ளிட்ட அரசாங்க ஆதரவு தரப்பினர், சட்டமா அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அவரை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது, புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவா என்ற நியாயமான சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


 அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான 'சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை' நிறுவுவதற்கு தற்போதைய சட்டமா அதிபர் தடையாக இருப்பதால், அவரை நீக்குவது அரசாங்கத்தின் தேவையாக மாறியுள்ளதுடன், இதற்காக சில குழுக்களைப் பயன்படுத்தி வருகிறபர்கள். 


புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உயிர்த்தியாகம் செய்த எமது நாட்டு இராணுவ வீரர்களை அவமானப்படுத்தவும், அவர்களை சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவும் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட சில தரப்பினர் முயற்சி செய்கின்றனர் என்றும், அதன் முதற்கட்டமாகவே இந்த சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை அமைக்க இந்த அரசு  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

'சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலக' சதித்திட்டத்தை தோற்கடிப்போம் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் அழைப்பு புலம்பெயர் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காக, அரசாங்கம் முன்னெடுக்கின்ற 'சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை' (Office of Independent Prosecutor) நிறுவும் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் எனவும், இராணுவ வீரர்களை வேட்டையாடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சிங்கள அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறைவேற்று சபை உறுப்பினர் 'ஐஸ்வர்ய குணரத்ன அதிகாரி' விடுத்துள்ள அறிக்கையில், தற்போது சில யூடியூப் குழுக்கள் உள்ளிட்ட அரசாங்க ஆதரவு தரப்பினர், சட்டமா அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அவரை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது, புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவா என்ற நியாயமான சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான 'சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை' நிறுவுவதற்கு தற்போதைய சட்டமா அதிபர் தடையாக இருப்பதால், அவரை நீக்குவது அரசாங்கத்தின் தேவையாக மாறியுள்ளதுடன், இதற்காக சில குழுக்களைப் பயன்படுத்தி வருகிறபர்கள். புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை நிறைவேற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.முப்பதாண்டு கால கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உயிர்த்தியாகம் செய்த எமது நாட்டு இராணுவ வீரர்களை அவமானப்படுத்தவும், அவர்களை சர்வதேச நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லவும் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட சில தரப்பினர் முயற்சி செய்கின்றனர் என்றும், அதன் முதற்கட்டமாகவே இந்த சுயாதீன அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை அமைக்க இந்த அரசு  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement