• May 28 2026

மன்னாரில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்!

Ziya / May 28th 2026, 11:44 am
image

சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்றைய தினம் புதன் கிழமை (27) காலை முதல் மாலை வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.


மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான பிரச்சினைகளுக்கு சட்டத்தரணிகளின் சட்ட ஆலோசனை உள்ளடங்களாக அரச அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய சகல உதவிகளும் முன்னெடுக்கப்பட்டது.


இதன் போது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சட்டத்தரணி ஊடாக இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதுடன், அரசு உத்தியோகத்தர் களிடமிருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டதோடு,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


நீதி அமைச்சுடன், UNDP மற்றும் UNICEF    இணைந்து   ஏற்பாடு செய்த குறித்த சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாமுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்றைய தினம் புதன் கிழமை (27) காலை முதல் மாலை வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான பிரச்சினைகளுக்கு சட்டத்தரணிகளின் சட்ட ஆலோசனை உள்ளடங்களாக அரச அலுவலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய சகல உதவிகளும் முன்னெடுக்கப்பட்டது.இதன் போது மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு சட்டத்தரணி ஊடாக இலவச சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதுடன், அரசு உத்தியோகத்தர் களிடமிருந்து தமது தேவைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ,உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டதோடு,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.நீதி அமைச்சுடன், UNDP மற்றும் UNICEF    இணைந்து   ஏற்பாடு செய்த குறித்த சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாமுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement