• May 04 2026

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

shanu / Nov 5th 2025, 2:08 pm
image

 

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.


பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் (05)  காலை தேவிபுரம் ஆ பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


இதன்போது கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் குறித்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்  புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்றையதினம் (05)  காலை தேவிபுரம் ஆ பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11,69,500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பரல்கள் என்பன புதுக்குடியிருப்பு பாெலிஸாரினால் கைப்பற்றப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாகவும் குறித்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Advertisement

Advertisement

Advertisement