சட்டமா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் எவ்வித தேவையற்ற தலையீடுகளும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சட்ட அமுலாக்க நிறுவனங்களது கடமையாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் சட்டமா அதிபரைக் குறிவைத்து வெளியிடப்பட்டு வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் மிக அவசியமானது.
இதனைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் பகிரப்படும் இத்தகைய பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கான ஒரு நியாயமற்ற முயற்சி என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டமா அதிபரின் பணிகள் குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குற்றவியல் விவகாரங்களில் சட்டமா அதிபர் ஒரு நீதித்துறை சார்ந்த பணியையே ஆற்றுகிறார்.
புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பதை அவர் தீர்மானிக்கிறார்.
இந்தச் செயல்முறையின் போது, அந்த ஆதாரங்கள் சட்டப்பூர்வமானவையா மற்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானவையா என்பதை அவர் மதிப்பீடு செய்கிறார்.
சட்டமா அதிபரின் முடிவுகள் இறுதியானவை அல்ல. அவை நீதிமன்றத்தில் எழுத்தாணை (Writ) மனுக்கள் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (Fundamental Rights) மீறல் மனுக்கள் மூலமாகவோ நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நீதி மற்றும் சுதந்திரத்தின் கொள்கைகளை நிலைநாட்ட, எவ்வித வெளிப்புற அழுத்தங்களும் இன்றி சட்டமா அதிபர் அலுவலகம் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் சட்டமா அதிபரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் எவ்வித தேவையற்ற தலையீடுகளும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் சட்ட அமுலாக்க நிறுவனங்களது கடமையாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் சட்டமா அதிபரைக் குறிவைத்து வெளியிடப்பட்டு வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் மிக அவசியமானது.இதனைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சமூக ஊடகங்களில் பகிரப்படும் இத்தகைய பதிவுகள், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கான ஒரு நியாயமற்ற முயற்சி என்று சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.சட்டமா அதிபரின் பணிகள் குறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குற்றவியல் விவகாரங்களில் சட்டமா அதிபர் ஒரு நீதித்துறை சார்ந்த பணியையே ஆற்றுகிறார்.புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில், ஒரு சந்தேக நபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என்பதை அவர் தீர்மானிக்கிறார்.இந்தச் செயல்முறையின் போது, அந்த ஆதாரங்கள் சட்டப்பூர்வமானவையா மற்றும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமானவையா என்பதை அவர் மதிப்பீடு செய்கிறார்.சட்டமா அதிபரின் முடிவுகள் இறுதியானவை அல்ல. அவை நீதிமன்றத்தில் எழுத்தாணை (Writ) மனுக்கள் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை (Fundamental Rights) மீறல் மனுக்கள் மூலமாகவோ நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் எனச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.நீதி மற்றும் சுதந்திரத்தின் கொள்கைகளை நிலைநாட்ட, எவ்வித வெளிப்புற அழுத்தங்களும் இன்றி சட்டமா அதிபர் அலுவலகம் சுயாதீனமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.