• Apr 22 2026

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசேகரவின் சடலம்; என்னிடம் ஒருமுறை பேசுங்கள் கதறும் மனைவி- மனதை உருக்கும் காட்சி!

shanu / Oct 23rd 2025, 5:05 pm
image

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் சடலம் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  

 

வெலிகம பிரதேச சபையின்  தலைவர் லசந்த விக்ரமசேகர பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 


தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது சபைக்குள் நுழைந்த சந்தேகநபர், அவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றார். 


துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 


உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் சடலம் தற்போது மிதிகமவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 


பிரதேசசபைத் தலைவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவரது மனைவி என்னிடம் ஒருமுறை பேசுங்கள் என்று நிலைகுலைந்து கதறுவது அனைவரையும் உருக வைத்துள்ளது.


பிரதேச சபைக்குள் வைத்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசேகரவின் சடலம்; என்னிடம் ஒருமுறை பேசுங்கள் கதறும் மனைவி- மனதை உருக்கும் காட்சி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் சடலம் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.   வெலிகம பிரதேச சபையின்  தலைவர் லசந்த விக்ரமசேகர பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது சபைக்குள் நுழைந்த சந்தேகநபர், அவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றார். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் சடலம் தற்போது மிதிகமவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரதேசசபைத் தலைவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் அவரது மனைவி என்னிடம் ஒருமுறை பேசுங்கள் என்று நிலைகுலைந்து கதறுவது அனைவரையும் உருக வைத்துள்ளது.பிரதேச சபைக்குள் வைத்து வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement