எல் நினோ (El Niño) வானிலை நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (05) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி,
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அசாதாரண வானிலை நிலைமையால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அநுராதபுர மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன், தொடர்ச்சியாக குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தீவிரமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன.
எல் நினோ தாக்கம்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது எல் நினோ (El Niño) வானிலை நிலைமையின் தாக்கம் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இன்று (05) வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 பேருக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த அசாதாரண வானிலை நிலைமையால் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 12,732 குடும்பங்களைச் சேர்ந்த 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 20,418 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 3 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,995 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.மேலும், பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 6,842 பேரில் 5,562 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 1,374 பேரில் 474 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.அநுராதபுர மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 151 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் முழுமையாக குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுடன், தொடர்ச்சியாக குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தீவிரமாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றன.