இலங்கையின் சிறந்த நிர்வாகச் செயல்பாடுகளுக்காக ஏனைய மாவட்டங்களுடன் போட்டியிட்டு பல விருதுகளைப் பெற்று முன்னிலையில் திகழும் கிளிநொச்சி மாவட்ட செயலகம், தற்போது மீண்டும் ஒரு முன்மாதிரியான மக்கள் நலச் சேவையை முன்னெடுத்துள்ளது.
தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பல்வேறு நிர்வாகத் தேவைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மாவட்ட செயலகம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் தரமான தர்பூசணிப் பழங்கள் விற்பனை செய்யும் விசேட ஏற்பாடு செயலக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்தின் இந்த மனிதநேயமிக்க மற்றும் வித்தியாசமான முயற்சிக்கு, அங்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.
அரச நிர்வாகப் பணிகளோடு மட்டுமல்லாது, பொதுமக்களின் உடனடி அத்தியாவசியத் தேவைகளையும் உணர்ந்து செயல்படுவதில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் தொடர்ந்து ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் தர்பூசணி விற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இலங்கையின் சிறந்த நிர்வாகச் செயல்பாடுகளுக்காக ஏனைய மாவட்டங்களுடன் போட்டியிட்டு பல விருதுகளைப் பெற்று முன்னிலையில் திகழும் கிளிநொச்சி மாவட்ட செயலகம், தற்போது மீண்டும் ஒரு முன்மாதிரியான மக்கள் நலச் சேவையை முன்னெடுத்துள்ளது.தற்போது நிலவி வரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பல்வேறு நிர்வாகத் தேவைகளுக்காக மாவட்ட செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மாவட்ட செயலகம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் தரமான தர்பூசணிப் பழங்கள் விற்பனை செய்யும் விசேட ஏற்பாடு செயலக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட செயலகத்தின் இந்த மனிதநேயமிக்க மற்றும் வித்தியாசமான முயற்சிக்கு, அங்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.அரச நிர்வாகப் பணிகளோடு மட்டுமல்லாது, பொதுமக்களின் உடனடி அத்தியாவசியத் தேவைகளையும் உணர்ந்து செயல்படுவதில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் தொடர்ந்து ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது.