2026ம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் பாதீடு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது வடமாகாண ஆளுநர் மற்றும் அவருடன் இணைந்த அதிகாரிகளின் வழிப்படுத்தலில் சில ஒழுங்கு விதிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. கடந்த 30ஆண்டு கால யுத்த நிலைமை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல சிவில் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தது.
இதனால் மக்கள் சிவில் நிர்வாக ஒழுங்கு விதிகளை பின்பற்றவில்லை நாடு க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வணிக நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு குடிபுகுதல் சான்றிதழ் கட்டாயம் தேவை என்ற விதி வடமாகாண ஆளுநரால் கொண்டுவரப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீதியோரங்களில் போடுபவர்கள், கழிவு வாய்க்கால்களில் கழிவுகளை போடுபவர்களுக்கு உடனடியாக தண்டப்பணம் அறவிடப்படும்
கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்தினை தடுப்பதற்கு கட்டாக்காலி கால்நடைகளை நகரத்தில் மாத்திரம் அல்ல கிராமங்களிலும் முன்னெடுக்கப்படும்.
மணலை விநியோகிக்கும் பொறுப்பு கரைச்சி பிரதேச சபைக்கு தரப்பட்டுள்ளது. குறிப்பாக கல்மடுக்குளத்தின் மணல் மற்றும் வெள்ள அனர்த்தத்தை தொர்ந்து காணப்படும் மணல்களையும் அகழ அனுமதி தரப்பட்டுள்ளது.
குறித்த மணல் அகழ்வோடு அனுமதியானது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக கழுவப்பட்ட மேலதிக மணலினை கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் ஐந்தாம் திகதியில் இருந்து கல்மடு குளத்தில் கழுவப்பட்ட மணலினை ஒரு டிப்பர் மணலினை 54.000 ரூபாய்க்கு கல்மடுகுளமபகுதியில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் குறித்த மணலினை வீட்டு தேவை மற்றும் சொந்த தேவைகளுக்காக பெற்றுக்கொள்வதாய் கிராம சேவையார் மற்றும் பிரதேச செயலாளர் சிபாரிசு பெற்று அதன் பின்னர் மணலினை பெற்றுக்கொள்ள முடியும் குறித்த மணலினை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும்23.01.2026 வரை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார் குறித்த மனநிலை பெற்று கொள்வதற்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
கரைச்சி பிரதேச சபையின் பாதீடு வெற்றி - பணிகள் முன்னெடுப்பு 2026ம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச சபையின் பாதீடு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.தற்போது வடமாகாண ஆளுநர் மற்றும் அவருடன் இணைந்த அதிகாரிகளின் வழிப்படுத்தலில் சில ஒழுங்கு விதிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது. கடந்த 30ஆண்டு கால யுத்த நிலைமை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல சிவில் செயற்பாடுகள் பாதிப்படைந்திருந்தது. இதனால் மக்கள் சிவில் நிர்வாக ஒழுங்கு விதிகளை பின்பற்றவில்லை நாடு க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வணிக நிலையங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு குடிபுகுதல் சான்றிதழ் கட்டாயம் தேவை என்ற விதி வடமாகாண ஆளுநரால் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வீதியோரங்களில் போடுபவர்கள், கழிவு வாய்க்கால்களில் கழிவுகளை போடுபவர்களுக்கு உடனடியாக தண்டப்பணம் அறவிடப்படும் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்தினை தடுப்பதற்கு கட்டாக்காலி கால்நடைகளை நகரத்தில் மாத்திரம் அல்ல கிராமங்களிலும் முன்னெடுக்கப்படும். மணலை விநியோகிக்கும் பொறுப்பு கரைச்சி பிரதேச சபைக்கு தரப்பட்டுள்ளது. குறிப்பாக கல்மடுக்குளத்தின் மணல் மற்றும் வெள்ள அனர்த்தத்தை தொர்ந்து காணப்படும் மணல்களையும் அகழ அனுமதி தரப்பட்டுள்ளது. குறித்த மணல் அகழ்வோடு அனுமதியானது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு குளத்தின் புனரமைப்பு பணிகளுக்காக கழுவப்பட்ட மேலதிக மணலினை கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் ஐந்தாம் திகதியில் இருந்து கல்மடு குளத்தில் கழுவப்பட்ட மணலினை ஒரு டிப்பர் மணலினை 54.000 ரூபாய்க்கு கல்மடுகுளமபகுதியில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் குறித்த மணலினை வீட்டு தேவை மற்றும் சொந்த தேவைகளுக்காக பெற்றுக்கொள்வதாய் கிராம சேவையார் மற்றும் பிரதேச செயலாளர் சிபாரிசு பெற்று அதன் பின்னர் மணலினை பெற்றுக்கொள்ள முடியும் குறித்த மணலினை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும்23.01.2026 வரை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார் குறித்த மனநிலை பெற்று கொள்வதற்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.