ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உள்ளூர் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்ததாகக் கூறப்படும் “களுபோவில அவிஷ்க” என அறியப்படும் சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களுபோவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ், 504 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களுடன், மின்னணு எடை இயந்திரம், இரண்டு இறப்பர் முத்திரைகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (14) மஹரகம நகரில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 306 கிராம் கொக்கெய்னுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 210 கிராம் குஷ் போதைப்பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் முறையே ருக்மல்கம மற்றும் ரத்மல்கம பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 61 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
“களுபோவில அவிஷ்க” கைது 2 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் சிக்கியது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் உள்ளூர் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்ததாகக் கூறப்படும் “களுபோவில அவிஷ்க” என அறியப்படும் சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களுபோவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ், 504 கிராம் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்களுடன், மின்னணு எடை இயந்திரம், இரண்டு இறப்பர் முத்திரைகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதேவேளை, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (14) மஹரகம நகரில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது 306 கிராம் கொக்கெய்னுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோன்று, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 210 கிராம் குஷ் போதைப்பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் முறையே ருக்மல்கம மற்றும் ரத்மல்கம பகுதிகளைச் சேர்ந்த 45 மற்றும் 61 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.