• Sep 04 2026

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவனுக்கு மகுடம்

Aathira / Sep 3rd 2026, 11:13 am
image

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், தமிழ் மொழி மூலத்தில் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட, ஆரம்பப் பிரிவை மட்டுமே கொண்ட மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுரேந்தர் சபின் என்ற மாணவனே இந்த தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை அவர் தனதாக்கியுள்ளார்.

மல்லாகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சுரேந்தர் சபினின் தந்தை, கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பப் பிரிவை மட்டுமே கொண்ட பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்திருப்பது, பாடசாலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ள சாதனையாக அமைந்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண மாணவனுக்கு மகுடம் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில், தமிழ் மொழி மூலத்தில் யாழ்ப்பாணம் மல்லாகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.யாழ். வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட, ஆரம்பப் பிரிவை மட்டுமே கொண்ட மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுரேந்தர் சபின் என்ற மாணவனே இந்த தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை அவர் தனதாக்கியுள்ளார்.மல்லாகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சுரேந்தர் சபினின் தந்தை, கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டு உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆரம்பப் பிரிவை மட்டுமே கொண்ட பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்திருப்பது, பாடசாலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ள சாதனையாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement