நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும். எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.
அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை. சட்டத்தை அமுல்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்." - என்றார்.
இந்நிலையில்
மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்ஹ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காகச் சிறைக்குச் சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள். பிறருடன் கதைக்கக்கூட மாட்டார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை.
ஊழல், மோசடிச் சம்பவங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று கூறும் நாமல் ராஜபக்ஷதான், அன்று கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தினார்.
எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர்களின் உடல்நலம் குறித்து வெளிநாட்டு மருத்துவமனைகளே அறிக்கை சமர்ப்பிக்கின்றன. நாட்டில் உள்ள அரச மருத்துவக் கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது இவர்கள் அதற்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்." - என்றார்.
சிறைக்குச் சென்றவர்கள் பொருளாதாரம் குறித்து பேசுவது வேடிக்கையானது நாமல் ராஜபக்ஷ மீது கடும் விமர்சனம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக கருதவில்லை. அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி அரசு சிறப்பாகச் செயற்பட்டு வருவதால் எதிர்க்கட்சிகளின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் போலிப் பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-"ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற முடியும். மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது சாதாரண சட்ட நடைமுறையாகும். எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும் காணவில்லை. சட்டத்தை அமுல்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன் கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும்." - என்றார். இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சிறையில் உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்ஹ தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காகச் சிறைக்குச் சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள். பிறருடன் கதைக்கக்கூட மாட்டார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை.ஊழல், மோசடிச் சம்பவங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று கூறும் நாமல் ராஜபக்ஷதான், அன்று கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தினார்.எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர்களின் உடல்நலம் குறித்து வெளிநாட்டு மருத்துவமனைகளே அறிக்கை சமர்ப்பிக்கின்றன. நாட்டில் உள்ள அரச மருத்துவக் கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது இவர்கள் அதற்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்." - என்றார்.