மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தனது வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அசுர வேகத்தில் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானின் எல்லைப் பகுதிகளை நிலைகுலையச் செய்யும் நோக்கில், மூன்று முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளன.
லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி:
காஃப்ர் ரூமான் (Kafr Roumane) நகரின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் மிகக் கொடூரமான கனரக பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஹிஸ்புல்லாவின் முக்கிய அரண்களாகக் கருதப்படும் நபாத்தியே அல்-ஃபவ்கா (Nabatiyeh al-Fawqa) நகரின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அடுக்கடுக்கான வான்வழித் குண்டுவீச்சுகளை நிகழ்த்தியுள்ளன.
எல்லையோரப் பகுதியான காஃப்ர் ஜௌஸ் (Kafr Jaouz) மீது இடைவிடாத பீரங்கிக் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் அடியோடு சேதமடைந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று எச்சரித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
போர்நிறுத்தப் பேச்சுகளுக்கு நடுவே இஸ்ரேல் வெறித்தனம் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரானின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தனது வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அசுர வேகத்தில் தீவிரப்படுத்தியுள்ளது.இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானின் எல்லைப் பகுதிகளை நிலைகுலையச் செய்யும் நோக்கில், மூன்று முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளன.லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி:காஃப்ர் ரூமான் (Kafr Roumane) நகரின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் மிகக் கொடூரமான கனரக பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.ஹிஸ்புல்லாவின் முக்கிய அரண்களாகக் கருதப்படும் நபாத்தியே அல்-ஃபவ்கா (Nabatiyeh al-Fawqa) நகரின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் அடுக்கடுக்கான வான்வழித் குண்டுவீச்சுகளை நிகழ்த்தியுள்ளன.எல்லையோரப் பகுதியான காஃப்ர் ஜௌஸ் (Kafr Jaouz) மீது இடைவிடாத பீரங்கிக் குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் அடியோடு சேதமடைந்துள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்று எச்சரித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.