• Aug 25 2026

மின் கட்டண உயர்வுக்கு பின்னால் அனல் மின் உற்பத்தியா?

Aathira / Aug 24th 2026, 7:22 pm
image

அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், எதிர்கால மின்சாரக் கட்டண மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம்.

சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, இன்னும் அனல் மின்சாரத்தைப் பெறுவது பொருத்தமான நிலைமை அல்ல.

இது தேவையற்ற முறையில் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது.

அத்துடன், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புடன் தீர்வை மதிப்புகளும் மாறுபடுவதால், அது மின்சாரக் கட்டண மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மின் கட்டண உயர்வுக்கு பின்னால் அனல் மின் உற்பத்தியா அனல் மின் உற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், எதிர்கால மின்சாரக் கட்டண மாற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.பல்வேறு சக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.மேலும் அவர் கூறுகையில்,கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் மாற்றமடைந்தமைக்கு அனல் மின் உற்பத்திக்கு அதிக செலவானதே காரணம்.சூரிய சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது, இன்னும் அனல் மின்சாரத்தைப் பெறுவது பொருத்தமான நிலைமை அல்ல.இது தேவையற்ற முறையில் அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது.அத்துடன், உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்புடன் தீர்வை மதிப்புகளும் மாறுபடுவதால், அது மின்சாரக் கட்டண மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement