• Apr 18 2026

ட்ரம்ப் சண்டியரை கண்டு இலங்கை அரசு அஞ்சுகின்றதா? ரோஹித சீற்றம்

Chithra / Mar 4th 2026, 7:01 pm
image


அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.


ரமழான் நோன்பு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆன்மீக கடமையாகும்.


நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமும் கூட தற்போது நோன்பு நோற்றுள்ள ஒருவராக இங்கு சமூகமளித்துள்ளார்.


இவ்வாறு நோன்பில் இருந்த தருணத்தில் தான் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஈரான் மக்கள் நோன்பில் இருந்த தருணத்தில் பாடசாலை மாணவர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைவரே இதனை செய்துள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சண்டியரை போன்று செயற்படுகின்றார்.அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.


இந்த விடயம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? அதனை தைரியமாக அரசாங்கம் கூற வேண்டும். 


மக்கள் விடுதலை முன்னணி எதிரணியில் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும். இப்போது அமைதி காக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா என வினவ விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ட்ரம்ப் சண்டியரை கண்டு இலங்கை அரசு அஞ்சுகின்றதா ரோஹித சீற்றம் அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.ரமழான் நோன்பு என்பது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு ஆன்மீக கடமையாகும்.நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமும் கூட தற்போது நோன்பு நோற்றுள்ள ஒருவராக இங்கு சமூகமளித்துள்ளார்.இவ்வாறு நோன்பில் இருந்த தருணத்தில் தான் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஈரான் மக்கள் நோன்பில் இருந்த தருணத்தில் பாடசாலை மாணவர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைவரே இதனை செய்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சண்டியரை போன்று செயற்படுகின்றார்.அனைத்து நாடுகளையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.இந்த விடயம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன அதனை தைரியமாக அரசாங்கம் கூற வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி எதிரணியில் இருந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும். இப்போது அமைதி காக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதியை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றதா என வினவ விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement