• May 28 2026

போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு NPP அரசின் பாதுகாப்பா? அதிரடித் தீர்ப்பளித்த நீதிபதிக்கு உடனடி இடமாற்றமா?!

shanu / May 28th 2026, 2:29 pm
image

கடந்த பல ஆண்டுகளாக சிறு அபராதங்களுடனும், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளுடனும் தப்பித்து வந்த போதைப்பொருள் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் பாய்ச்சினார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி  அலெக்ஸ்ராஜா. பதவியேற்ற முதல் வாரத்திலேயே பல லட்சங்களில் அபராதமும், கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து, "போதையை நிறுத்து, அல்லது சட்டத்தால் நிறுத்தப்படுவாய்" என குற்றவாளிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த அவர், வெறும் இரண்டே வாரங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


அரசின் இந்த இருட்டடிப்புச் செயல், யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் இருந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கியுள்ளது.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவோ, மக்கள் பணத்தை சூறையாடும் ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவோ நேர்மையான தீர்ப்புகள் வழங்கப்பட்டால், உடனடியாக அந்த நீதிபதி தூக்கியடிக்கப்படுவார் என்ற அபாயகரமான முன்மாதிரி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்தகால அரசாங்கங்கள் கூட இந்த அளவிற்கு மோசமான நீதித்துறைத் தலையீடுகளைச் செய்ததில்லை என்பதே நிதர்சனம்.



நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதல் மக்களால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அரசின் அடிவருடியாகச் செயல்படும் வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் நேரடி மற்றும் அப்பட்டமான தலையீட்டாலேயே இந்த இடமாற்றம் அரங்கேறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.


"மாற்றம்" எனக் கூறிக்கொண்டு வந்த இந்த அரசாங்கமும், கடந்தகால அரசுகளைப் போலவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை இந்தச் சம்பவம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. நியாயமான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளை எவ்வித விசாரணையுமின்றி உடனடியாகத் தண்டிக்கும் உலகின் ஒரே நாடாக இலங்கை தலைகுனிந்து நிற்பது ஜனநாயகத்தின் இருண்ட பக்கத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு NPP அரசின் பாதுகாப்பா அதிரடித் தீர்ப்பளித்த நீதிபதிக்கு உடனடி இடமாற்றமா கடந்த பல ஆண்டுகளாக சிறு அபராதங்களுடனும், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளுடனும் தப்பித்து வந்த போதைப்பொருள் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் பாய்ச்சினார் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி  அலெக்ஸ்ராஜா. பதவியேற்ற முதல் வாரத்திலேயே பல லட்சங்களில் அபராதமும், கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து, "போதையை நிறுத்து, அல்லது சட்டத்தால் நிறுத்தப்படுவாய்" என குற்றவாளிகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த அவர், வெறும் இரண்டே வாரங்களில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசின் இந்த இருட்டடிப்புச் செயல், யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் இருந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கியுள்ளது.போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராகவோ, மக்கள் பணத்தை சூறையாடும் ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராகவோ நேர்மையான தீர்ப்புகள் வழங்கப்பட்டால், உடனடியாக அந்த நீதிபதி தூக்கியடிக்கப்படுவார் என்ற அபாயகரமான முன்மாதிரி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. கடந்தகால அரசாங்கங்கள் கூட இந்த அளவிற்கு மோசமான நீதித்துறைத் தலையீடுகளைச் செய்ததில்லை என்பதே நிதர்சனம்.நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான இந்தத் தாக்குதல் மக்களால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அரசின் அடிவருடியாகச் செயல்படும் வட மாகாண ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் நேரடி மற்றும் அப்பட்டமான தலையீட்டாலேயே இந்த இடமாற்றம் அரங்கேறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் அம்பலப்படுத்துகின்றன."மாற்றம்" எனக் கூறிக்கொண்டு வந்த இந்த அரசாங்கமும், கடந்தகால அரசுகளைப் போலவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதை இந்தச் சம்பவம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. நியாயமான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளை எவ்வித விசாரணையுமின்றி உடனடியாகத் தண்டிக்கும் உலகின் ஒரே நாடாக இலங்கை தலைகுனிந்து நிற்பது ஜனநாயகத்தின் இருண்ட பக்கத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Advertisement

Advertisement

Advertisement