கடந்த ஓராண்டில் தனது தற்காப்பு ஆயுத உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் தளவாடங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரெசா தலாயி-நிக், கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தற்காப்பு ஆயுத உற்பத்தி விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதனை ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களின் பயன்பாடும் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தலாயி-நிக் கூறினார்.
இதன் மூலம் வெளிநாட்டு விநியோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் ஈரான் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரான் கையில் அதிகரிக்கும் ஆயுதங்கள்-போருக்கு தயாராகிறதா தெஹ்ரான் கடந்த ஓராண்டில் தனது தற்காப்பு ஆயுத உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளின் தளவாடங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரெசா தலாயி-நிக், கடந்த ஆண்டு ஜூலை முதல் இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தற்காப்பு ஆயுத உற்பத்தி விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதனை ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களின் பயன்பாடும் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தலாயி-நிக் கூறினார்.இதன் மூலம் வெளிநாட்டு விநியோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் ஈரான் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.