• Apr 15 2026

ஐ.பி.எல் 2026 - கொல்கத்தாஅணியை வீழத்தி மும்பை அணி வெற்றி!

IPL
shanu / Mar 30th 2026, 11:46 am
image

ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர்களாக களம் கண்ட வீரர்கள் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக, கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


அஜிங்க்யா ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களையும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர்


இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபின் ஆலன் (37) மற்றும் அதிரடி வீரர் ரிங்கு சிங் (33) ஆகியோரும் ரன் வேகத்தைக் குறைக்காமல் விளையாடினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய வெற்றியிலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்தது


பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. 


ஐ.பி.எல் 2026 - கொல்கத்தாஅணியை வீழத்தி மும்பை அணி வெற்றி ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர்களாக களம் கண்ட வீரர்கள் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக, கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் இளம் வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.அஜிங்க்யா ரஹானே 40 பந்துகளில் 67 ரன்களையும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர்இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபின் ஆலன் (37) மற்றும் அதிரடி வீரர் ரிங்கு சிங் (33) ஆகியோரும் ரன் வேகத்தைக் குறைக்காமல் விளையாடினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற இமாலய வெற்றியிலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்ததுபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. 

Advertisement

Advertisement

Advertisement