பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கு வசதியாக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான இடங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் அது தொடர்பில் டெங்கு நிவாரண மையத்தைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, டெங்கு நிவாரண மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு : 011 796 6366 அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் 'கிளீன் ஸ்ரீலங்கா'செயலகம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார், ஊடக அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.
தற்போது டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார அவசர செயல்பாட்டு ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அசங்க வேதமுல்ல, டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், 'கிளீன் ஸ்ரீலங்கா' அலுவலக அதிகாரிகள், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
நுளம்பு பெருகும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கு வசதியாக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் அது தொடர்பில் டெங்கு நிவாரண மையத்தைத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய, டெங்கு நிவாரண மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு : 011 796 6366 அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் 'கிளீன் ஸ்ரீலங்கா'செயலகம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார், ஊடக அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் இன்று (05) நடைபெற்றது. தற்போது டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய சுகாதார அவசர செயல்பாட்டு ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அசங்க வேதமுல்ல, டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், 'கிளீன் ஸ்ரீலங்கா' அலுவலக அதிகாரிகள், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.