• May 19 2026

தீவிரமடையும் பருவமழை; வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எச்சரிக்கை

Aathira / Dec 19th 2025, 12:11 pm
image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்சாதனப் பயன்பாடு மற்றும் மரங்களுக்கு அருகில் நிற்பது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

​மேலும், கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை அவதானிப்புகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தீவிரமடையும் பருவமழை; வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எச்சரிக்கை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.​இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தொடர்ச்சியான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்சாதனப் பயன்பாடு மற்றும் மரங்களுக்கு அருகில் நிற்பது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.​மேலும், கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை அவதானிப்புகளைப் பின்பற்றிச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement